வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும் போராட்டத்துக்கும் பூரண ஹர்தலுக்கும் அழைப்பு!

#SriLanka #NorthernProvince #Protest #Missing
Mayoorikka
2 years ago
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மாபெரும்  போராட்டத்துக்கும் பூரண ஹர்தலுக்கும்  அழைப்பு!

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண ஹர்த்தாலுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவத்தை, கண்காணிப்பை வலியுறுத்தி குறித்த ஹர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். 

 யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாண தலைவர்கள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.

 அன்றையதினம் வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் மேற்கொள்ளப்படவுள்ளது.

 குறித்த ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 குறித்த தினம் விடுமுறை என்பதால் வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!