தேர்தல் குறித்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு!
திட்டமிட்டபடி உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படாததன் மூலம் மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை எதிர்வரும் 26 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளுராட்சி தேர்தல் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்தப்பட்ட இருந்தது. இருப்பினும் திட்டமிட்ட வகையில் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் இது குறித்து தேசிய மக்கள் சக்தி மற்றும் பெஃப்ரல் அமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தன.
குறித்த மனு இன்று (24.07) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்தது. இருப்பினும் இந்த மனுவை விசாரணை செய்யும் ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் அங்கம் வகிக்கும் பிரியந்த ஜயவர்த்தன என்ற நீதியரசர் வேறு ஒரு வழக்கு விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.
இதன்காரணமாக தேர்தல் குறித்து சமர்பிக்கப்பட்டிருந்த குறித்த மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.