சீனாவில் பாடசாலை உடற்பயிற்சி கூரை வீழ்ந்ததில் 11 மாணவர்கள் உயிரிழந்தனர்
#China
#School
#world_news
#Lanka4
Mugunthan Mugunthan
2 years ago

சீனாவில் பாடசாலை உடற்பயிற்சிக் கூடத்தினது மேற்கூரை சரிந்து வீழ்ந்ததில் அங்கிருந்த 11 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்
வடகிழக்கு சீனாவின் ஹிலோங்ஜியாங் மாகாணத்தில் கிகிஹார் நகரில் உள்ள நடுநிலைப் பாடசாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் மேற்கூரை சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகினர்.
ஞாயிறன்று பிற்பகல் 2.56-க்கு மேற்கூரை சரிந்து விழுந்ததுள்ளதாக மாகாண தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து நடைபெற்றபோது லாங்ஷா மாவட்டத்தின் நடுநிலைப் பள்ளியில் 19 பேர் உடற்பயிற்சி கூடத்தில் இருந்துள்ளனர்.
இதிலே 15 பேர் அங்கு ஏற்பட்ட விபத்தில் சிக்கி மாண்டுள்ளதாக மீட்புத்துறையினர் தெரிவித்தனர். மீதி நான்கு பேர் மட்டும் காயங்களுடன் உயிர்பிழைத்தனர்.



