ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை நீடிப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கருத்து!
#SriLanka
#Sri Lanka President
Mayoorikka
2 years ago
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்த தெரிவித்துள்ளார்.
இந்த நிவாரணத்தை நீடிப்பதற்கு தாம் சமர்ப்பித்த முன்மொழிவுகள் காரணமாக இருக்கலாம் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
ஏனைய இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் உள்ளூராட்சி மன்றத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட பிரேரணைகள் காரணமாகவே இந்த சலுகைகள் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் பங்களிக்க முடிந்ததில் தாம் பணிவுடன் மகிழ்ச்சியடைவதாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.