உயிருடன் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவருக்கு நேர்ந்த கதி! பகிரங்க குற்றச்சாட்டு

#SriLanka #Death #Hospital #Lanka4
Kanimoli
2 years ago
உயிருடன் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டவருக்கு நேர்ந்த கதி! பகிரங்க குற்றச்சாட்டு

மன்னார் - இரணை இலுப்பக்குளம் வைத்தியசாலையில் உள்ளவர்களின் பொறுப்பற்ற செயல் காரணமாக, மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம் தாக்கி விபத்தில் காயமடைந்த நபர் ஒருவரை, அவரது நண்பர்கள் இரணை இலுப்பக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில் அங்கு படுகாயமடைந்த நபருக்கு எவ்வித முதலுதவியும் வழங்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 அதன் பிறகு படுகாயமடைந்த நபரை வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பியுள்ளனர். இவ்வாறு வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்படும் போது படுகாயமடைந்த நபர் உயிருடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இலுப்பக்குளம் வைத்தியசாலையில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருக்கும் போது ஈச்சங்குளம் பகுதியில் வைத்து விபத்திற்குள்ளான நபரின் உயிர் பிரிந்துள்ளது. 

 சரியான நேரத்திற்கு இலுப்பக்குளம் வைத்தியசாலைக்குச் சென்றும் வைத்தியசாலையில் உள்ளவர்களின் அசமந்தப் போக்கினால் இந்த உயிர் பறிபோயுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரணை இழுப்பக்குளம் வைத்தியசாலையில் உள்ள அம்பியூலன்ஸ் வண்டியும் பாவனைக்கு உகந்த வகையில் தயார் நிலையில் இல்லாததன் காரணமாக படுகாயமடைந்த நபரை வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

images/content-image/1690175346.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!