பாணந்துறையில் நீரிழ் மூழ்கிய பாடசாலை மாணவர் ஒருவர் மாயம்!
#SriLanka
#Lanka4
#Missing
Thamilini
2 years ago
பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை நல்லுருவ கடற்கரைக்கு நான்கு மாணவர்கள் சென்ற நிலையில், அவர்களில் நீரிழ் மூழ்கிய மூவர் உயிர்பிழைத்துள்ளதாகவும் ஒருவர் காணாமல்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை மலமுல்ல பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஹெசன் சத்சர சுதர்சன பீரிஸ் என்பவரே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன இளைஞரை தேடும் நடவடிக்கையை பிரதேசவாசிகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளளனர்.
இந்த சம்பவம்தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.