வடகிழக்கு சீனாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 09 பேர் பலி!
#China
#world_news
#Rain
#Lanka4
Dhushanthini K
2 years ago

வடகிழக்கு சீனாவில் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹீலோங்ஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹாரில் உள்ள எண். 34 நடுநிலைப் பள்ளியில் உள்ள உடற்பயிற்சி கூடம் நேற்று (23.07) இடிந்து விழுந்தது.
இந்நிலையில், கட்டிட இடிபாடுகளில் இருந்து 13 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
"கிட்டத்தட்ட 160 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 39 தீயணைப்பு வாகனங்கள் அடங்கிய தேடுதல் மற்றும் மீட்பு குழுவினர் களத்தில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில வாரமாக கடுமையான வெப்பமும், மழையும் வாட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



