வறிய மக்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவில் இழைக்கப்படும் அநீதி

#SriLanka #Lanka4 #samurthi
Kanimoli
2 years ago
வறிய மக்களுக்கு சமுர்த்தி கொடுப்பனவில் இழைக்கப்படும் அநீதி

திருகோணமலை -கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரங்கல் சாந்தி நகரில் வறுமையில் பிடிக்கப்பட்டுள்ள மக்களின் சமுர்த்தி முத்திரைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த கிராம மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். அரசாங்கத்தினால் தற்பொழுது சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்ற நிலையில் மிகவும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுடைய கொடுப்பனவுகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது images/content-image/1690168617.jpg

 மேலும் இக்கட்டான நிலையில் அரசு வாழ்வாதார திட்டத்தை முன் னெடுக்காமல் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இல்லாமல் செய்வது மிகவும் வேதனை அளிப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

images/content-image/1690168632.jpg

 பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய பிரச்சினைகளை கிண்ணியா பிரதேச செயலாளரிடம் தெரியப்படுத்தி உள்ள நிலையில் தங்களுடைய நிலையை பார்ப்பதற்கு கூட வீடுகளுக்கு வரவில்லை எனவும் கிராம மட்டத்தில் இயங்கி வருகின்ற சமுர்த்தி குழுக்கள் வழங்கிய தகவலுக்கு அமைவாக புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.

 ஆகவே வறுமையில் வாழும் மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகளை சிறந்த முறையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

images/content-image/1690168642.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!