பிரித்தானியாவில் ஒரு மில்லியன் வீடுகளை கட்டித்தருவதாக ரிஷி சுனக் வாக்குறுதி!
#Election
#Lanka4
#Britain
Dhushanthini K
2 years ago

பிரித்தானியாவில் ஆளும் கட்சியான கன்சர்வேடிவ் கட்சி தற்போது இளம் வாக்காளர்களிடையே சரிவை கண்டுள்ளது.
குறிப்பாக வீட்டு வாடகை உயர்வு, வாழ்க்கைச் செலவு உயர்வு போன்ற பல்வேறு பிரச்சினைகளை பிரித்தானிய மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதற்கிடையே அடுத்து வரக்கூடிய தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி மோசமான தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், ஒரு மில்லியன் புதிய வீடுகளை கட்டித்தர வாக்குறுதி அளித்துள்ளார். தேர்தலை இலக்காகக் கொண்டே இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவை அதிகமாக உள்ள நகரின் உள்பகுதிகளில் வீடுகளை கட்டுவதில் தனது அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று சுனக் கூறியுள்ளார்.



