தரமற்ற மருந்துகளை பாவனை தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பம்
#SriLanka
#Export
#Lanka4
#tablets
Kanimoli
2 years ago
தரமற்ற மருந்துகளை பாவனை தொடர்பில் கணக்காய்வாளர் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் முன்னைய விசாரணைகளில் தரமற்ற மற்றும் பதிவு செய்யப்படாத மருந்துகளின் பயன்பாடு குறித்த குறிப்பிடத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்ரமரத்ன தெரிவித்தார்.
தரமற்ற மருந்துகள் பாவனை குறித்து பல்வேறு பகுதிகளில் இருந்து அறிக்கைகள் வெளியாகியுள்ளதால் இந்த விசேட விசாரணையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.