இந்தியாவிலிருந்து 300ற்கும் மேற்பட்ட மருந்து வகைகள் இலங்கைக்கு!
#India
#SriLanka
#Medicine
Mayoorikka
2 years ago
இந்திய கடன் திட்டத்தின் கீழ் கோரப்பட்டுள்ள 300ற்கும் மேற்பட்ட மருந்து வகைகள் கிடைக்கவுள்ளதாக இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு கிடைக்கப்பெறும் மருந்துகளின் தரத்தை பரிசீலிக்க வேண்டும் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித்த அலுத்கே தெரிவித்தார்.
தேவையான மருந்துகள் பெற்றுக்கொள்ளப்படாத பட்சத்தில் நாட்டில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்