எதிர்காலத்தில் நெருக்கடிக்குள் சிக்காமல் அந்நிய செலாவணியை பேணுவது அவசியம்!
#SriLanka
#Sri Lanka President
#Ranil wickremesinghe
#economy
Mayoorikka
2 years ago
கடன் மறுசீரமைப்பினால் மாத்திரம் இந்த நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கைகளின்படி 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் உயர் மட்டத்திலான செயல்திறனை வெளிப்படுத்திய 65 நிறுவனங்களுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் எதிர்காலத்தில் நெருக்கடிக்குள் சிக்காமல் இருக்க இனிமேல் ஒவ்வொரு வருடமும் அந்நிய செலாவணி மிகுதியை பேணுவது, இன்றியமையாதது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்