கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில் தாண்டிக்குளம் பகுதியில் கடவையை கடந்த லொறி மீது மோதி விபத்து
#SriLanka
#Accident
#Lanka4
#Train
Kanimoli
2 years ago
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த Intercity AC ரயில். வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் ரயில் கடவையை கடந்த லொறி மீது மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் இன்று (23) மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் லொறி சாரதியும் மற்றுமொருவரும் படு காயமடைந்துள்ளனர்.
நேற்றையதினம் இந்த ரயில் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த போது மீசாலையில் முதியவர் ஒருவர் ரயில் கடவையை கடந்த போது மோதியதில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.