சர்வகட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி
#SriLanka
#Meeting
#Ranil wickremesinghe
#Lanka4
#srilankan politics
Kanimoli
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். சர்வகட்சி கூட்டம் எதிர்வரும் புதன்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட கட்சித் தலைவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.