தோட்ட முகாமையாளர் பதிவு செய்த புகாரைத் தொடர்ந்து இருவர் கைது
ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா கிலன்டில் தோட்ட முதலாளிகள் சீவலி முதன்நாயக்கவினால் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் 22.07.2023.நேற்று முன்தினம் செய்ய பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து அதே தோட்டத்தை சேர்ந்த தேயிலை தொழிற்சாலை அதிகாரி
மற்றும் பணி புரியும் தொழிலாளி ஒருவரும் சந்தேகத்தின் பேரில் 22.07.20323.அன்று கைது செய்யப்பட்டு இன்று 23 .07.2023 .ஹட்டன் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த பட்ட போது அவ் இருவரையும் எதிர் வரும் 26 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தது உள்ளார் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் கிலன்டில் தோட்ட முகாமையாளர் சீவலி முதன்நாயக்கவின் புகாரைத் தொடர்ந்து தேயிலை தொழிற்சாலையில் இருந்து களவாட பட்ட தேயிலை தூள் 66 கிலோ அதன் பெருமதி 72600/- ரூபாய் என அவர் கூறினார்.