வவுனியாவில் புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து : இருவர் படுகாயம்

#SriLanka #Accident #Train
Prathees
2 years ago
வவுனியாவில்  புகையிரதத்துடன் லொறி மோதி விபத்து :  இருவர் படுகாயம்

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இன்று (23) பிற்பகல் விபத்து ஏற்பட்டுள்ளது.

 யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த விரைவு ரயில், லொறியுடன் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

 வடக்கு புகையிரத பாதை நவீனமயமாக்கப்பட்டதன் பின்னர் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் புகையிரதங்கள் இயங்கினாலும் தாண்டிக்குளம் நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

 இதனால் நடக்கவிருந்த அசம்பாவிதம் ஓரளவு தவிர்க்கப்பட்டதாகவும் நமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

 விபத்தில் லொறியின் சாரதி மற்றும் துணை சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 லொறியின் முன் பகுதி மாத்திரம் புகையிரதத்துடன் மோதியுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!