ரஷ்யாவின் எல்லைப் பகுதியில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்திய உக்ரைன்!
#NuwaraEliya
#Russia
#Ukraine
#Lanka4
Dhushanthini K
2 years ago

உக்ரைன் போரில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது..
இதன்படி ரஷ்யாவின் எல்லைப் பகுதிகளில் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்தியதாக ரஷ்யாவின் கவர்னர் தெரிவித்துள்ளார்.
மேற்கு பெல்கோரோட் பகுதியில் உள்ள ரஷ்ய எல்லை கிராமமான ஷுரவ்லெவ்கா மீது உக்ரைன் கிளஸ்டர் வெடிகுண்டை வீசியதாக பெல்கோரோட் கவர்னர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் தெரிவித்தார். '
பெல்கோரோட் பகுதியில் உக்ரேனியப் படைகள் 21 பீரங்கி குண்டுகள் மற்றும் மூன்று கிளஸ்டர் வெடிமருந்துகளை பயன்படுத்தியதாக கூறிய அவர், ஆதாரங்கள் எதனையும் வெளியிடவில்லை.
இதேவேளை உக்ரைன் இந்த மாதம் அமெரிக்காவிடமிருந்து கிளஸ்டர் குண்டுகளைப் பெற்றது. ஆனால் எதிரி வீரர்கள் ஊடுருவலை தடுக்க மட்டுமே அவற்றைப் பயன்படுத்துவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



