நீர்கொழும்பில் கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் மாயம்!

#Lanka4 #Missing
Thamilini
2 years ago
நீர்கொழும்பில் கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் மாயம்!

நீர்கொழும்பு பெரியதுகல பிரதேசத்தில் கடலுக்கு நீராடச் சென்ற மூன்று இளைஞர்கள் நீரிழ் மூழ்கி காணாமல்போயுள்ளனர். 

குறித்த இளைஞர்கள் இன்று (23) மதியம் 12.45 மணியளவில் கடலில் நீராடச் சென்ற போது இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

டயகம, சுன்னாகம், சாந்தபுரம் ஆகிய பிரதேசங்களில் வசித்து வந்த 20 மற்றும் 23 வயதுடைய மூன்று இளைஞர்களே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். 

காணாமல் போனவர்களை தேடும் பணிகள் உயிர்காப்பு படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!