பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மாத்திரம்தான் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவோம் - சாகர!
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
Thamilini
2 years ago
பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தை கட்டியெழுப்பவே ரணிலை ஜனாதிபதியாக்கினோம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ம்பதெனியவில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் பொருளாதாரத்தை மீளவும் கட்டியெழுப்பவே ரணிலை ஜனாதிபதியாக்கினோம் எனவும் இதனை அடிப்படையாகக் கொண்டே போராடங்களின் பின்னர் அவரை ஜனாதிபதியாக நியமித்தாகவும் கூறினார்.
இதை தவிர்த்து ஜனாதிபதி எடுக்கும் வேறு எந்த முடிவுக்கும் இணக்கம் தெரிவிப்பதாக இணக்கப்பாடு எட்டப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.