400 ரூபாவை தாண்டும் டொலரின் பெறுமதி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
#SriLanka
#Dollar
#Lanka4
#Warning
Thamilini
2 years ago
இலங்கையில் டொலரின் பெறுமதி 400 ரூபாவை தாண்டும் என பேராதனை பல்கலைக்கழக பொருளியல் மற்றும் புள்ளிவிபரவியல் துறை பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தை சிறந்த முறையில் கட்டியெழுப்ப வேண்டுமாயினும் உள்ளூர் தயாரிப்புகளை மேம்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த அவர், வெளிநாட்டு பொருளாதாரத்தை அந்நிய செலாவணி மூலம் கட்டியெழுப்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயங்களை மேற்கொள்ளாமல் இருக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் டொலரின் பெறுமதி 400 ரூபாவை எட்டும் எனவும், பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.