கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் கடவுச்சீட்டு விநியோகம் தாமதம்
#SriLanka
#Flight
#Airport
#Passport
#Lanka4
Kanimoli
2 years ago
கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் ஒன்லைன் மூலம் பல விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விரைவில் சிக்கல்களை நிவர்த்தி செய்து, கடவுச்சீட்டு விநியோகத்தை விரைவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஒன்லைன் மூலம் விண்ணப்ப முறைமையின் மூலம் சுமார் 35 ஆயிரம் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதிலும், இதுவரை 3,700 கடவுச்சீட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.