மினுவாங்கொடை வர்த்தகர்களிடம் மில்லியன் கணக்கில் கப்பம் வசூலிக்கும் கும்பல்
#Sajith Premadasa
#money
Prathees
2 years ago
வெளி நாட்டில் இருந்து செயற்படும் கும்பல் ஒன்று மினுவாங்கொடை பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களிடம் இருந்து சில காலமாக இலட்சக்கணக்கில் கப்பம் வசூலித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பெருமளவான வர்த்தகர்கள் தமது வர்த்தகத்தை கைவிட்டு பிரதேசங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பிரேமதாச தெரிவித்தார்.
மேலும் அந்த தொழிலதிபர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த தொழிலதிபர்களை வெளி நாட்டில் உள்ள கும்பல் மிரட்டி மிரட்டி பணம் கேட்டு வருவதாக கூறினார்.