லண்டனில் இலங்கையருக்கு 11 ஆண்டுகள் சிறைதண்டனை

#SriLanka #Arrest #Sexual Abuse #London
Prasu
2 years ago
லண்டனில் இலங்கையருக்கு 11 ஆண்டுகள் சிறைதண்டனை

லண்டனில் பெண்ணொருவரை ஏமாற்றி சீரழித்த புகைப்பட கலைஞரான இலங்கையருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் காவல்துறையினர் அது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முன் வந்து தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மொடலாகும் ஆசையில் தன்னை நாடிய பெண்களை குறிவைத்த 42 வயதான சிறிதரன் சயந்தன் என்பவரே குற்றவாளி ஆவார். சீனாவை சேர்ந்த 30களில் உள்ள பெண்ணொருவர் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் ப்ராம்டன் சாலையில் உள்ள சயந்தன் புகைப்பட ஸ்டுடியோவுக்கு சென்றார். மொடலாகும் ஆசையில் சயந்தனின் உதவியை சீனப்பெண் நாடியதாக கூறப்படுகிறது.

புகைப்படங்கள் பதிவு செய்வதற்காக, சயந்தன் கூறிய கட்டணத்தையும் செலுத்தியுள்ளார். பின்னர் சயந்தனின் அழைப்பை ஏற்று ஜூலை 8ம் திகதி ஒரு மதுபான விடுதியில் இருவரும் சந்தித்தனர். அங்கு அப்பெண்ணை கட்டாயப்படுத்தி அதிக மது அருந்த வைத்துள்ளார்.

இதனையடுத்து போதையில் மயங்கிய பெண்ணை தமது ஸ்டூடியோவுக்கு அழைத்து சென்று சயந்தன் சீரழித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஜூலை 31ம் திகதி காவல்துறையில் புகார் கொடுத்தார். இதையடுத்து கைதான சயந்தன் மீது ஹெண்டன் கிரவுன் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

ஏழு நாள் விசாரணைக்குப் பிறகு அவர் பெண்ணை பலாத்காரம் செய்த இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வழக்குகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன் தினம் சயந்தனுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் சயந்தன் வாடிக்கையாளர்களுக்கு எதிராக பாலியல் தாக்குதலில் ஈடுபட்டார் என இரண்டு குற்றச்சாட்டுகள் இருந்தது. அந்த நேரத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் அந்த வழக்குகள் மூடப்பட்டன.

 இருப்பினும் அந்த வழக்குகள் முன்னாள் புகைப்படக்காரருக்கு எதிரான மோசமான தன்மை சான்றாக அண்மை வழக்கு விசாரணையின் போது வழங்கப்பட்டன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!