பிறந்தநாள் விழாவில் தீ வைத்த நபர்கள்! யுவதி மரணம்! 09 பேர் படுகாயம்

#SriLanka #Vavuniya #Death
Prathees
2 years ago
பிறந்தநாள் விழாவில் தீ வைத்த நபர்கள்! யுவதி மரணம்! 09 பேர் படுகாயம்

பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த வீட்டிற்கு இனந்தெரியாத குழுவினரால் தீ வைக்கப்பட்டதில் யுவதிஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 9 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 இது தொடர்பான சம்பவம் இன்று (23ஆம் திகதி) அதிகாலை வவுனியா தோணிக்கல் பகுதியில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

 உயிரிழந்தவர் ஓமந்த பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடையவர். தீ விபத்தில் காயமடைந்தவர்களில் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 02 வயது சிறுவன், 07 மற்றும் 13 வயதுடைய பெண் பிள்ளைகள், 19 முதல் 41 வயதுக்கு இடைப்பட்ட 04 பெண்கள் மற்றும் 42 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 மேலும், ஓமந்த பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரும் காயமடைந்து வவுனியா மஹரோஹலவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 வவுனியா தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் தீ பரவியுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 119 குறுஞ்செய்தி ஊடாக பொலிஸார் இந்த நிலையத்திற்கு அறிவித்துள்ளனர். 

 உடனடியாக செயற்பட்ட பொலிஸார், வவுனியா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

 தீ விபத்து ஏற்பட்ட போது மேற்படி வீட்டில் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 முகமூடி அணிந்த குழுவொன்று வந்து வீட்டுக்கு தீ வைத்தது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!