வெளி நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது
#SriLanka
#Arrest
Prathees
2 years ago
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மத்துகம, ஹொரஹேன பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அளுத்கம முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கி மற்றும் அதே ரகத்தை சேர்ந்த இரண்டு துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் ஹொரஹேன பதுகம பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று மத்துகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.