காட்டுத் தீ காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றுகிறது கிரீஸ்

கிரீஸ் நாட்டில் ரோட்ஸ் தீவில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. தீவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ள பின்னணியில் காட்டுத் தீ பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய ஆபத்து காரணமாக கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவில் உள்ள ஆயிரக்கணக்கான ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகளை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ரோட்ஸ் தீவில் இருந்து சுமார் 3,500 பேர் தரை வழியாகவும் கடல் வழியாகவும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கிரீஸின் தீயணைப்புத் துறையினர் இதுவரை எதிர்கொண்ட நடவடிக்கைகளிலேயே இந்த காட்டுத் தீ நிலைமை மிகவும் கடினமான நடவடிக்கை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய பிராந்தியத்தைச் சேர்ந்த பல நாடுகள் தற்போது கடும் வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது நிலவும் காற்றின் ஓட்டம் காரணமாக காட்டுத் தீ பரவும் அபாயமும் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



