பங்களாதேஷில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 17 பேர் பலி!
#Accident
#world_news
#Bus
#Lanka4
#Bangladesh
Dhushanthini K
2 years ago

பங்களாதேஷின் சத்திரகண்டா பகுதியில் உள்ள குளத்தில் பேருந்து ஒன்று கவிழந்து விபத்துகுள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் மூவர் குழந்தைகள் என அறிவிக்கப்பட்டுள்ளதுன், 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேருந்தின் கொள்ளளவிற்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



