இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளை நாளை முதல் ஆரம்பிக்க தீர்மானம்
#SriLanka
#School
#Lanka4
#School Student
#Examination
Kanimoli
2 years ago
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் முதற்கட்ட பணிகள் நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அடுத்த ஓகஸ்ட் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறையளிக்கப்படவுள்ளது. இதனையடுத்து இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மாதம் 27ஆம் திகதி வரையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறும்.