தரமற்ற மருந்து மற்றும் கானுலாக்களை நீக்க நடவடிக்கை!

#SriLanka #Health #Lanka4
Thamilini
2 years ago
தரமற்ற மருந்து மற்றும் கானுலாக்களை நீக்க நடவடிக்கை!

அரச வைத்தியசாலைகளில் இருந்து 02 வகை அஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பல அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் ஆஸ்பிரின் பல மாதிரிகள் சமீபத்தில் தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் பரிசோதிக்கப்பட்டது. 

பரிசோதனைக்கு அமைய   குறித்த 02 வகை மருந்து வகைகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, சம்பந்தப்பட்ட வகை 02 ஐச் சேர்ந்த அனைத்து ஆஸ்பிரின் மருந்துகளையும் அகற்றுமாறு மருத்துவ வழங்கல் பிரிவு அனைத்து மருத்துவமனைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 

எவ்வாறாயினும், இது தொடர்பான வகை 02 வைத்தியசாலைகளில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலைகளில் அஸ்பிரின் தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்க குறிப்பிடுகின்றார். 

இதேவேளை, சிறுநீரக நோயாளர்களின் வடிகட்டும் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஏவி ஃபிஸ்துலா எனப்படும் விசேட கானுலாவின் தரமற்ற பகுதியை அகற்றுவதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்படி நடவடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!