புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் டெலிகொம் நிறுவனத்தை கைப்பற்றுவார் - நாலக
டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சுதந்திர மக்கள் சபை காரியாலயத்தில் நேற்று (22.07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், மறுசீரமைப்பு என்ற பெயரில் நட்டமடைந்த நிறுவனங்களுக்கு பதிலாக லாபம் தருகின்ற நிறுவனங்களை தனியார் மயப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நட்டமடையும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணிகள் மந்தகதியில் உள்ளதாகவும், . டெலிகொம் நிறுவனத்தின் 50 சதவீத பங்குகள் அரசாங்கத்திடமும், 49 சதவீத பங்குகள் தனியார் வசமும் காணப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்திடம் உள்ள 50 சதவீத பங்குகளையும் தனியார் மயப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட கவனம் செலுத்தியுள்ளார் எனத் தெரிவித்த நாலக கொடஹேவா டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார் என்றும் கூறினார்.
இந்நிலையில், இவ்வாறாக டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என சரத் வீரசேகர முன்வைத்த அறிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தெரிவுக்குழுக்களின் செயற்பாடுகளை பலவீனப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.