புகையிரதத்துடன் மோதுண்ட லொறி : ஒருவர் பலி!
#Death
#Accident
#Lanka4
Thamilini
2 years ago
பாதுகாப்பற்ற புகையிரத கடவையின் ஊடாக பயணித்த சிறிய ரக லொறியொன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (22.07)வெல்லவ, வரத்தன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது
அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தின் போது லொறியில் இருவர் பயணித்துள்ளதுடன், லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாரம்மல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த லொறியின் சாரதியும் மற்றைய நபரும் வெல்லவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.