சுகாதார அமைச்சர் பதவிக்கு கடும்போட்டி?
#SriLanka
#Keheliya Rambukwella
Thamilini
2 years ago
கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சர பதவிக்கு உயர்மட்ட போட்டி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி தற்போது சுயேச்சையாக செயற்படும் எதிர்க்கட்சியின் பலமான உறுப்பினர் ஒருவர், சுகாதார அமைச்சர் பதவியை தனக்கு வழங்குமாறு உத்தியோகப்பற்றற்ற முறையில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் இருவரும் இதற்கு முன்னர் சுகாதார அமைச்சராக பதவி வகித்த போதிலும் குறித்த கோரிக்கை தொடர்பில் குறிப்பிடத்தக்க பதில் எதுவும் வழங்கப்படவில்லை என அறியமுடிகின்றது.
இதற்கிடையில், சுயேச்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினருக்கு சுகாதாரத் துறையில் கண்காணிப்புப் பொறுப்பை வழங்குவதற்கான ஆயத்தம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.