இலங்கையில் யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிக்க தாய்லாந்து அரசாங்கம் திட்டம்
#SriLanka
#Hospital
#government
#Elephant
#Thailand
Prasu
2 years ago
இலங்கையில் யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை நிர்மாணித்து வழங்குவது தொடர்பில் தாய்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் தெரிவித்துள்ளார்.
யானைகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும், யானைகளுக்கு வைத்தியசாலை நிர்மாணத்துக்கு தேவையான ஏற்பாடுகள் போன்றவை குறித்து ஆராய்வதற்காக தாய்லாந்தின் சிறப்புக் குழுவொன்று நாட்டிற்கு விஜயம் செய்யவுள்ளது.