வங்காளதேசம்: பஸ் கவிழ்ந்து குளத்தில் விழுந்ததில் 17 பேர் உயிரிழப்பு

#Death #world_news #Bus #Breakingnews
Mani
2 years ago
வங்காளதேசம்: பஸ் கவிழ்ந்து குளத்தில் விழுந்ததில் 17 பேர் உயிரிழப்பு

வங்காளதேச நாட்டின் பரிஸ்ஹல் மாகாணத்தில் உள்ள பண்டாரியா நகரில் இருந்து 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் பரிஸ்ஹல் நகர் நோக்கி சென்றுகொண்டிருந்தது.

ஜலாக்தி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் அருகே இருந்த குளத்திற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சுக்குள் இருந்த அனைவரும் குளத்திற்குள் மூழ்கினர்.

தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், பஸ்சுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் இந்த விபத்தில் பயணிகள் 17 பேர் உயிரிழந்தனர். வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆறுகள் மற்றும் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!