கொடைவள்ளல் தியாகியினால் 100 மாணவர்களுக்கு ஊடகவியலாளர் பாரிஸூடாக மாதாந்த உதவி

#SriLanka #வாமதேவன் தியாகேந்திரன்
கொடைவள்ளல் தியாகியினால் 100 மாணவர்களுக்கு ஊடகவியலாளர் பாரிஸூடாக மாதாந்த உதவி

கொடைவள்ளல் தியாகியினால் 100 மாணவர்களுக்கு ஊடகவியலாளர் பாரிஸூடாக மாதாந்த உதவி நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு இராணுவ கட்டளை தளபதி மட்டக்களப்பு மாவட்டத்தின் பின்தங்கிய கிராமங்களிலுள்ள பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 100 மிகத் தேவையுடைய மாணவர்களுக்கு "கற்றலுக்கு வறுமை தடையல்ல” என்ற அடிப்படையில் ஊக்குவிப்பு உதவித்தொகை நேற்று (20) வழங்கி வைக்கப்பட்டது.

images/content-image/1690035075.jpg

 இவ்வேலைத்திட்டத்தின் மூலம் பல்லின மாணவ சமூகத்தை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைப்பதனூடாக நல்லிணக்கச் செயற்பாடுகளை ஊக்குவித்து, நாட்டின் நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் நோக்கிப்பயணிக்க முடியுமென ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம். பாரிஸ் குறிப்பிட்டார். 

 இதனடிப்படையிலேயயே யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் சொந்த நிதி மூலம் இம்மாணவர்களுக்கான மாதாந்த உதவித்தொகை அவர்களின் கற்றல் காலம் முடியும் வரை வழங்கி வைக்கப்படவுள்ளது.

images/content-image/1690035341.jpg

 தொடர்ந்தும் அவர் இவ்வாறான மனிதாபிமான பணிகளை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக தியாகி அறக்கொடை நிதியத்தின் இணைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் மேலும் தெரிவித்தார்.

images/content-image/1690035542.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!