வெப்பக்காற்றால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
#world_news
#heat
Dhushanthini K
2 years ago

காலநிலை மாற்றத்தால் ஐரோப்பிய மக்கள் வெப்ப அலையுடன் போராடி வருகின்ற நிலையில்,வெப்ப காற்று வீசுவது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என உலகப் பொருளியல் கருத்தரங்கின் அறிக்கை கூறுகிறது.
1990ஆம் ஆண்டுக்கும் 2016ஆம் ஆண்டுக்கும் இடையில் அதீத வெப்பத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 விழுக்காட்டிற்கும் மேல் அதிகமாக உள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது எதிர்வரும் 2080 ஆம் ஆண்டில் நான்கு மடங்கால் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிதமிஞ்சிய வெப்பம், ஏழை மக்களை அதிகம் வாட்டுவதாகக் கூறப்பட்டது. நீண்ட நேரம் வெயிலில் இருப்பது பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் எனவும், சில வேளைகளில் மரணம்கூட நிகழக்கூடும் என்று அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.



