இலங்கையில் மேலும் ஒரு பெண் மற்றம் குழந்தை மாயம்!
#SriLanka
#Lanka4
#Missing
Thamilini
2 years ago
இலங்கையில் மற்றுமொரு தாயும், சிறுமி ஒருவரும் காணாமல்போயுள்ளதாக ஹகுரன்கெத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹகுரன்கெட்ட ஹோப் தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய தாயும் ஒரு வயதும் 8 மாதமும் கொண்ட பெண் குழந்தையும் கடந்த 20 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக பெண்ணின் தாயார் முறைப்பாடு அளித்துள்ளார்.
குறித்த நபரும் அவரது சிறிய மகளும் காணாமல் போன தினத்தன்று லங்காம பேரூந்து ஒன்றில் ஹங்குரன்கெத்த, ரிக்கிலகஸ் கடற் பகுதிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனரிடம் ஹகுரன்கெத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை அங்குருவாதோட்ட பகுதியில் தாயும், சேயும் காணாமல்போன நிலையில், சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.