யாழ் - கொழும்பு அதி சொகுசு இரயில் சேவை
#SriLanka
#லங்கா4
#யாழ்ப்பாணம்
#luxurious
Mugunthan Mugunthan
2 years ago
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் எதிர்வரும் முதலாம் திகதி முதல் சொகுசு ரயில் ஒன்றை சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த ரயிலில் 8 முதலாம் வகுப்பு பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் உள்ளன. நாளாந்தம் இரவு 10 மணிக்கு கொழும்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 06 மணிக்கு யாழ்ப்பாணத்தை வந்தடையும்
யாழ்ப்பாணத்தில் இருந்து நாள்தோறும் இரவு 10 மணிக்கு கொழும்பு நோக்கி இந்த ரயில் புறப்படவுள்ளது.
இந்த ரயிலின் முதல் வகுப்பிற்கான கட்டணம் 4,000 ரூபா என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.