மரம் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழப்பு
#SriLanka
#Death
Prathees
2 years ago
அக்குரஸ்ஸ மற்றும் அமலகொட சந்தியில் வாகனம் புதுப்பிக்கும் இடத்திற்கு அருகில் மரம் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அக்குரஸ்ஸ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
குறித்த வாகன திருத்தும் நிலையத்திலிருந்து சேவைகளை பெற்றுக்கொள்ள வந்த நால்வரும் அதன் உரிமையாளரும் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.