பிரமிட் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரின் காருக்கு தீ வைப்பு
#SriLanka
#fire
Prathees
2 years ago
பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரின் பெறுமதியான கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டதாக ஹூங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பகுதியில் பிரமிட் திட்டம் மூலம் ஏராளமானோர் பணம் டெபாசிட் செய்துள்ளதாகவும், பணம் கொடுப்பது நிறுத்தப்பட்டதால் டெபாசிட் செய்தவர்கள் அவர் மீது கோபமடைந்ததாகவும் பொலிசார் கூறுகின்றனர்.
தீ விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. ரன்ன கிழக்கு, விரோதர மாவத்தையில் வசிக்கும் இவர், இந்த சம்பவம் குறித்து ஹூங்கம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தங்காலை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்னவின் மேற்பார்வையில் ஹூங்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.