கழுத்தில் விழுந்த எடை தூக்கும் கருவி: சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்த ஜிம் பயிற்சியாளர்
#Death
#world_news
#Breakingnews
#Gym
#Weight
Mani
2 years ago

இந்தோனேசியாவின் பாலி நகரை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் ஜெஸ்டின் விக்கி வயது 33 இவர் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஜெஸ்டின் பிரபலமான நபராக இருந்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 15-ம் தேதி ஜெஸ்டின் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் பயன்படுத்திய எடை தூக்கும் கருவி (பார்பெல்) எதிர்பாராதவிதமாக அவரது கழுத்தில் விழுந்தது.
அதிக எடை தூக்கும் கருவி அவர் மீது விழுந்ததில் ஜெஸ்டின் கழுத்து முறிந்தது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.



