இலங்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்: சீனத் தூதுவர்
இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு.குய் ஷென்ஹோங் மற்றும் பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
தற்போதைய அரசாங்கத்தின் முதல் வருடத்தில், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முயற்சிகளில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு Qi Shenhong தெரிவித்தார்.
பொருளாதார பிரச்சினைக்கு குறுகிய கால தீர்வுகள் மற்றும் நீண்ட கால தீர்வுகள் சமமாக முக்கியம் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை நேரடி தனியார் முதலீடு மற்றும் விவசாயம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல் துறைகளில் முதலீடுகளை நீண்டகால தீர்வுகளாக வரவேற்கிறது எனத் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து இலங்கைக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவைப் பாராட்டிய பிரதமர், நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்குப் பாடசாலைப் பைகள், எழுதுபொருட்கள், பாடசாலை சீருடைக்கான துணிகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்குவதில் சீனாவின் பங்களிப்புக்காக நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் கலந்து கொண்டார்.