அமெரிக்காவில் உள்ள ஏரியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு
#Death
#Flight
#world_news
#Helicopter
#Breakingnews
Mani
2 years ago
இன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள நார்த் சோல்ப் பகுதியில் 4 பயணிகளுடன் ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டது. ஹெலிகாப்டர் அலாஸ்கா ஏரிப்பகுதியில் பறந்துகொண்டிருந்தது.
அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் பயணித்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏரியில் விழுந்த ஹெலிகாப்டரில் வேறு யாராவது இருந்தார்களா? விபத்துக்கு காரணம் என்ன? தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.