தேயிலை தொழிற்சாலை அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா தோட்டத்தில் உள்ள தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுளள்து.
குறித்த தோட்டத்தை சேர்ந்த 52 வயது உடைய மூன்று குழந்தைகளின் தந்தையான உதவி வெளிக்கள உத்தியோகத்தர் செமுவேல் வின்சென்ட் என்பவரது சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி க்கு கிடைத்த தகவலை தொடர்ந்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய உதவி அதிகாரி ஆனந்த பத்மசிறீ மற்றும் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பரிசோதனை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ஹட்டன் நீதிமன்ற நீதிவான் வந்து பார்வை இட்ட பின்னர் உடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள உள்ளது.
ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகள் பதிவு செய்ய உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.
