மன்னாரில் லக்சுமி கரத்தின் மூன்றாவது லஷ்சுமி இல்லம் திறந்துவைப்பு!
பல்வேறுப்பட்ட மக்கள் நலன் சார் செயல் திட்டங்களை முன்னெடுத்து வரும் ' லக்சுமி கரங்கள் ' அதன் ஒரு பகுதியாக ' லக்சுமி இல்லம் -03 ' வீட்டினை மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கூராய் கிராம உத்தியோகத்தர் பிரிவின் சீது விநாயகர் குளத்தில் அமைத்து கொடுத்துள்ளனர்.
கடந்த 10 வருடங்களாக குடிசை வீட்டில் வசித்து வந்த இளம் குடும்பத்தின் நிலையை அறிந்து ' லக்சுமி தாயவள் ' அக்குடும்பத்தை கரம்பற்றி நிரந்தர வீட்டை கட்டி அதனை அக் குடும்பத்தாருக்கு உத்தியோகப்பூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை (21) கையளித்துள்ளனர்.
குறித்த நிகழ்விற்கு மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் ஏ.சி.அரவிந்தராஜ் மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.பி.பவநிதி மற்றும் திருக்கேதீச்சர திருப்பணி சபையின் செயலாளர் சு.பிருந்தாவன நாதன் , கூராய் பாடசாலையின் அதிபர்,லக்சுமி கரத்தின் பணிப்பாளர் .இரா.சண்முகலிங்கம் ,கட்டாடிவயல் பவா உள்பட லக்சுமி கரத்தின் தொண்டர்கள், கலந்து சிறப்பித்துள்ளனர்.
' லக்சுமி கரத்தின் ' லக்சுமி இல்லம் இவ் வீட்டுடன் மூன்றாவது வீட்டினை கட்டி முடித்துள்ளனமையும் குறிப்பிடத்தக்கது.





