இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பானில் வேலைவாய்ப்பு!
#SriLanka
#Sri Lanka President
#Japan
#work
#Foriegn
Mayoorikka
2 years ago
இலங்கையில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழிநுட்ப பிரிவில் வேலை வாய்ப்புக்களை ஜப்பானில் பற்றறுத்த தருவுதற்கு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த நிலையில் ஜப்பானில் தொழில்நுட்ப பயிலுநர்களாக இணைத்துக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு, அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஜப்பான் நிறுவனம் ஒன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் அண்மையில் அமைச்சரை சந்தித்துள்ளனர்.
இதன்போது, குறித்த கோரிக்கைக்கு, ஜப்பானிய அதிகாரிகள் சாதகமாக பதிலளித்துள்ளதுடன், இலங்கையின் தொழில்நுட்ப திறனைப் பாராட்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.