கடலில் போதையில் மிதக்கும் சுறாமீன்கள்!

#world_news #Lanka4
Dhushanthini K
2 years ago
கடலில் போதையில் மிதக்கும் சுறாமீன்கள்!

புளோரிடாவை ஒட்டிய கடல் பகுதியில் பெருமளவிலான கொகோயின் போதைப் பொருட்கள் நீரில் கொட்டப்படுகின்றன. இதனை உண்ணும் கடல் உயிரிணங்கள் போதையில் மிதப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

 ஆவணப்படத்திற்காக போதைப்பொருள்கள் கடலில் கொட்டப்பட்டதா என்பதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். 

images/content-image/1689996096.jpg

நீரில் கொட்டப்படும் கோகோயின் மருந்தை உட்கொண்ட சுறாக்கள், பைத்தியக்காரத்தனமான வழிகளில் செயற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

போதைப்பொருள் கடத்தல்காரர்கள். புளோரிடாவைச் சுற்றியுள்ள கடல்களில் எண்ணற்ற டன் கண்க்கான கொகோயின் போதைப்பொருளை  விட்டுச் சென்றுள்ளதாகவும்,  இது தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து கொண்டு செல்லப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

images/content-image/1689996260.jpg

இவை பெரும்பாலும் கடல் நீரோட்டங்களில் கரையில் கழுவப்படுகின்றன. கடந்த மாதம், அமெரிக்க கடலோர காவல்படை கரீபியன் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் 14,100 பவுண்டுகள் (6,400 கிலோ)க்கும் அதிகமான கோகோயினைக் கைப்பற்றப்பட்டது நினைவிருக்கலாம். இவ்வாறு கைப்பற்றபடுகின்ற போதைப்பொருளில் பெரும்பாலானவை கடலுடன் சங்கமிக்கிறது. 

இந்நிலையில் கடலில் கலக்கின்ற போதை மருந்துகள்,  சுறாமீன்கள் மீது ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா என்று ஆய்வு செய்துள்ளனர். இதற்காக சுறாமீன்களின்    நடத்தையை அவதானிப்பதற்கு ஒருவர் டைவ் செய்துள்ளார். இதன்போதே சுறாமீன்கள் போதையில் மிதப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!