13ஆவது திருத்தம் குறித்து ஆராய சர்வகட்சி கூட்டத்தை கூட்ட திட்டம்!

#SriLanka #Lanka4
Thamilini
2 years ago
13ஆவது திருத்தம் குறித்து ஆராய சர்வகட்சி கூட்டத்தை கூட்ட திட்டம்!

13வது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி சர்வகட்சி கூட்டத்தை கூட்டவுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.  

இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் அனைத்து மாகாணங்களுக்கும் சுயாட்சி கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்திய அவர், 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை அமுல்படுத்துவது இலங்கையில் இனப்பிரச்சினைக்கு முடிவுகட்ட எமக்கு வழங்கப்பட்ட ஜனநாயகத்தின் கருவி எனவும் தெரிவித்தார். 

பொருளாதார நெருக்கடி, தொற்றுநோய் மற்றும் பல பிரச்சினைகளின் மூலம் நாடு தற்போது சரியான பாதையில் வந்துள்ளதாகவும், இது இலங்கையின் வளர்ச்சியின் தசாப்தமாக இருக்கும் என்றும் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்திய-இலங்கை கடற்றொழில் பிரச்சினைக்கு மனிதாபிமான அணுகுமுறையின் மூலம் நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!