இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 07 இலட்சத்திற்கும் அதிகமானோர் இலங்கை வருகை!
#SriLanka
#Lanka4
Thamilini
2 years ago
இந்த வருடத்தின் முதல் காலாண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 07 இலட்சத்து 14 ஆயிரத்து 598 ஆக அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தகவல்களில், கடந்த ஜூலை 20 நாட்களில் மட்டும் ஒன்பதாயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து 15330 சுற்றுலாப் பயணிகள், வருகை தந்ததாகவும், 10184 பேர் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்ததாகவும், சீனாவிலிருந்து 5963 பேரும், ஜேர்மனியில் இருந்து 5141 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.