சுகாதார அதிகாரிகள் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்க கட்டுப்பாடு!
#SriLanka
#Letters
#Lanka4
Thamilini
2 years ago
சுகாதார அதிகாரிகள் ஊடகங்களிடம் கருத்துக்களை வெளியிடுவதை கட்டுப்படுத்தும் வகையில், சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜனக சந்திரகுப்தவின் கையொப்பமிடப்பட்ட கடிதம் ஒன்று வெளியாகியுள்ளது.
குறித்த கடிதத்தின்படி, துறைத் தலைவரின் ஒப்புதல் இன்றி, பொது அதிகாரிகள் ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிடவோ, அல்லது வழங்கவோ முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை மீறி செயற்படும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.